உ.பி.யில் செல்போன் டார்ச்லைட் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை – பிரியங்கா காந்தி கண்டனம்

Home

shadow

                  உ.பி.யில் செல்போன் டார்ச்லைட் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை – பிரியங்கா காந்தி கண்டனம்

                  உத்தரபிரதேசம் மாநிலத்தில் நிலவி வரும் மின்வெட்டு தொடர்பாக, பாஜக அரசிற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி  கண்டனம் தெரிவித்துள்ளார்.

                 உத்தரபிரதேச மாநிலத்தில் மின்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தொடர் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, அரசு மருத்துவமனைகளில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு செல்போன் டார்ச்லைட் மூலம் சிகிச்சையளிப்பதாக இணைய தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

              இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரானரியங்கா காந்தி, உத்தர பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு தொடர்பாக பா.ஜ.க.விற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இந்த முறையில் தான் சிகிச்சை அளிப்பீர்களா என கேள்வி எழுப்பினார். மேலும், பாஜக அரசின் பொய்யான வாக்குறுதிகள் மீட்டர் அளவில் ஓடிக் கொண்டிருக்கின்றன எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :