ஊக்க மருந்து சர்ச்சையில் தங்க மங்கை கோமதி மாரிமுத்து

Home

shadow

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து சமீபத்தில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதிற்காக தற்காலிகமாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கோமதியின் 'பி' மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரியவந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவ்வாறு ஊக்க மருந்து பயன்படுத்தினார் என்று உறுதி படுத்தப்பட்டால் அவர் வாங்கிய தங்கம் பறிபோக வாய்ப்பு இருக்கிறதாக கூறப்படுகிறது. 

 இச்செய்தியை கோமதி தரப்பினர் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக, கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி கூறுகையில், கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :