எல்லை தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது

Home

shadow

காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று காலை இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, இந்திய தூதர் ஜே.பி.சிங்கிற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது. இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் ராணுவ வீரர்கள் இறக்கவில்லை என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான், கண்ணி வெடிகுண்டு காரணமாகவே வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :