ஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்

Home

shadow

                      ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நகரத்தார் வர்த்தக சபை சார்பாக உலகளாவிய நகரத்தார் வணிக மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. இதனை தொடக்கிவைத்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோயில்களுக்காகவும், பாரம்பரியத்தை காப்பதற்காகவும் காலம் காலமாக பாடுபட்டு வருபவர்கள் நகரத்தார்கள் என குறிப்பிட்டார். பட்ஜெட் ஆவணங்களை சூட்கேஸில் கொண்டு செல்வது ஆங்கிலேயர்களின் வழக்கம் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், அதன் காரணமாகவே, இந்த ஆண்டு பட்ஜெட் ஆவணங்கள் சூட்கேசில் கொண்டு செல்லப்படவில்லை என கூறினார். 

அதோடு, நரேந்திர மோடி அரசு ஊழல் அரசு அல்ல என்பதை தெரிவிக்கும் நோக்கில், தங்கள் அரசு சூட்கேஸ் அரசு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்தரமடைந்ததில் இருந்து உரிமைகளைப் பற்றி பேசி பேசியே கடமைகளை விட்டுவிட்டோம் என ஆதங்கப்பட்ட நிர்மலா சீதாராமன், ஏழைகள் பயன்பெற வேண்டும் என்பதற்காகவே வசதிபடைத்தவர்களுக்கு இம்முறை கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், அகில இந்திய பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரான சுதாகர் ரெட்டி, தனது உடல் நிலை காரணமாக அப்பொறுப்பில் இருந்து விலக முடிவெடுத்தார். மேலும், அவர் தனக்குப் பதிலாக து.ராஜாவின் பெயரை பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர்கள் கூட்டம் புது தில்லியில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்றது.

அக்கட்சியின் மூத்த தலைவர் அமர்ஜித் கவுர், கேரளாவை சேர்ந்த பினோய் விஸ்வம், அதுல்குமார் ரஞ்சன் மற்றும் து.ராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கூட்டத்தின் முடிவில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக து.ராஜா நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அடுத்த பொதுச் செயலாளராக து.ராஜா அறிவிக்கப்படுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி. ராஜா வருவது அக்கட்சி வட்டாரத்தை உற்சாகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :