ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Home

shadow

ஐ.சி.சி. லெவன் அணியில் இந்தியாவின் எக்தா பிஷ்ட், மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ஐ.சி.சி. லெவன் அணி அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பெண்கள் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 லெவன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வீராங்கனைகளின் செயல்பாடு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு இந்த அணிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.சி.சி. டி20 அணியில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் எக்தா பிஷ்ட் இரு அணிகளிலும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :