ஒடிஸா - 4 யானைகள் உயிரிழப்பு

Home

shadow

  

ஒடிஸா மாநிலத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதியதில் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

ஒடிஸா மாநிலம் ஜர்ஸுகுடா மாவட்டத்தில் பக்டிகி ரயில் நிலையம் அருகே இன்று காலை 4 யானைகள் தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளன. அப்போது அந்த வழித்தடம் வழியாக வேகமாக வந்த பொகாரோ - ஆலப்புழா விரைவு ரயில் யானைகள் மீது மோதியதில் 4 யானைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர், யானைகளின் உடல்களை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். யானைகளின் உயிரிழப்புக்கு வனத்துறை மற்றும் ரயில்வே துறை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என சுற்றுச்சூழல் வல்லுநர் பிஸ்வஜித் மஹந்தி தெரிவித்துள்ளார். ஒடிஸா மாநிலத்தில் ரயில்களில் அடிபட்டு யானைகள் இறக்கும் சம்பவம் வாடிக்கையாகி வருவது விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :