ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள அதிமுக வேட்பாளர்கள்

Home

shadow

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று  வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாரதிய ஜனதா, தேமுதிகதமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி  5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும், தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது வழக்கம். அந்த அடிப்படையில் 20 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று 12.30 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இன்றுச் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

 

இது தொடர்பான செய்திகள் :