கச்சா எண்ணெய் இறக்குமதி சலுகையை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளதாக தகவல்

Home

shadow

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்பட்ட சலுகையை அமெரிக்கா ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய சர்வதேச நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, தைவான், துருக்கி, இத்தாலி மற்றும் கிரீஸ் ஆகிய 8 நாடுகளுக்கு மட்டும் இதில் சலுகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சலுகையை முடித்துக் கொள்வதற்கான அறிவிப்பை அமெரிக்கா இன்று வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை மீறும் நாடுகள் மீதும் பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா உத்தேசித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பான செய்திகள் :