கடந்த 17 மாதங்களில் நாட்டில் சுமார் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - வருங்கால வைப்பு நிதி அமைப்பு

Home

shadow

       கடந்த 17 மாதங்களில் நாட்டில் சுமார் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில்கடந்த 17 மாதங்களில் நாட்டில் சுமார் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 17 மாதங்களில் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 96 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 609 வேலைவாயப்பு மட்டுமே இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019 ஜனவரி வரையில் ஊழியர் சேம நல நிதியம் 76 லட்சத்து 48 ஆயிரம் புதிய சந்தாதாரர்களை இணைத்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 22 முதல் 25 வயதுக்குட்பட்டோருக்கு 2 லட்சத்து 44 ஆயிரம்  வேலை வாய்ப்புகளும் 18 முதல் 21 வயதுக்குட்பட்டோருக்கு 2 லட்சத்து 24 ஆயிரம் லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :