கடல் முதல் வானம் வரை பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காங்கிரஸ் கட்சி ஊழல் புரிந்தது - பிரதமர் நரேந்திர மோடி

Home

shadow

       கடல் முதல் வானம் வரை பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காங்கிரஸ் கட்சி ஊழல் புரிந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த கட்டடம், திருப்பூர், சென்னையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், சென்னை துறைமுகம் - மணலி இடையே குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் செலுத்தாமல் இடைத்தரகர்களை வைத்து கடலில் இருந்து வானம் வரையில் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் காங்கிரஸ் ஊழல் புரிந்ததாகவும் குற்றச்சாட்டினார். ராணுவம் புரட்சி செய்ய முயன்றதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் சொல்லி உள்ளதாக தெரிவித்த அவர் இந்திய ராணுவம் ஒருபோதும் இதுபோன்ற செயலில் ஈடுபடாது என தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் 11 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மோடி எதுவும் செய்யவில்லை என்றால் நீங்கள்  ஏன் தோற்கடிக்க மெகா கூட்டணிகளைத் தேடிச் செல்கிறீர்கள் என எதிர்கட்சியினரிடம் கேள்வி எழுப்பினார்.. வாரிசு அரசியலை முன்னெடுப்பது, நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துவது ஆகியவையே எதிர்க்கட்சிகளின் திட்டம் என்றும் விவசாயிகளையும், இளைஞர்களையும் தவறாகத் திசைதிருப்பும் பணியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவித்தார்..

இது தொடர்பான செய்திகள் :