கனமழையால் அசாமில் 95பேர் பலி, 55 லட்சம் பேர் பாதிப்பு

Home

shadow

                      
                         அசாம், பீகார் மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு 95பேர் பலியாகியுள்ளனர். 55 லட்சம் பேர் வாழ்விழந்து நிற்கின்றனர்.

வடமாநிலமான பீகாரில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. பீகாரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. வடகிழக்கு மாநிலமான அசாமில் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. மேலும் இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக இந்த மாநிலங்களில் 95பேர் பலியாகியுள்ளனர். 55 லட்சம் பேர் வாழ்விழந்து நிற்கின்றனர். தெருக்களும் வீடுகளும் தண்ணீரில் மிதப்பதால் கரையேறுவதற்கும் வழியின்றி மக்கள் சீரமப்பட்டு வருகின்றனர். அசாமில் உள்ள பிரம்மபுத்ரா ஆற்றில் தண்ணீர் அபாய நிலையை தாண்டியதால் வெள்ளம் வந்துவிடும் என்று அஞ்சி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :