கர்நாடக மாநிலம், தார்வாட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

Home

shadow

கர்நாடக மாநிலம், தார்வாட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், குமரேஸ்வர நகரில் 5 மாடிக் கட்டிடம் ஒன்றின் கட்டிடப் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது.  இதில் மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.  இதுவரை இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :