கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி்த்தராமையா தெரிவித்துள்ளார்

Home

shadow

  

கர்நாடகா அமைச்சரவை டிசம்பர் 22 ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி்த்தராமையா தெரிவித்துள்ளார். 


கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் குமாரசாமி உள்ளார். கடந்த மே மாதம் பேட்டியளித்த குமாரசாமி காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளி்க்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தயார் என்றார். இந்நிலையில் நேற்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சித்தராமையா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டசபை கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக வரும் டிசம்பர் 22 ஆம் தேதி விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் 2 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் கட்சியில் 6 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரயைில் இடம் பெறுவர் என்றார்.

 

இது தொடர்பான செய்திகள் :