கர்நாடகா - 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது

Home

shadow

                                     கர்நாடகா மாநிலம் தார்வாட்டில் 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடாக மாநிலம் தார்வாட்டில் உள்ள குமரேஸ்வர நகரில் 5 மாடி கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக கட்டடம் சரிந்து விழுந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 60 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பான செய்திகள் :