கர்நாடகாவின் முதலமைச்சர் ஆகிறார் எடியூரப்பா

Home

shadow


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றவுள்ள சூழ்நிலையில்எடியூரப்பா மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதா 116 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனயைடுத்து தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் நிலை உருவெடுத்துள்ளதால் எடியூரப்பா மீண்டும் கர்நாடகா முதலமைச்சராகிறார். தனது இல்லத்தில் இன்று வழிபாடு நடத்திய எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில், நாளை மறுநாள் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தெரிவித்தார். இதற்காக, கண்டீராவா அரங்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றே 17-ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சியின் பதவியேற்பு விழா நடைபெறும் என எடியூரப்பா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :