கர்நாடகாவில் ஓலா கேப் நிறுவனத்திற்கு போக்குவரத்து துறை 6 மாதங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

Home

shadow

                                        கர்நாடகாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக ஓலா கேப் நிறுவனத்திற்கு அம்மாநில போக்குவரத்து துறை 6 மாதங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்க அம்மாநில போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேல் இந்த தடை அமலில் இருக்கும் நிலையில், வாடகை கார் நிறுவனமான ஓலா, கர்நாடகாவில், இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கர்நாடக போக்குவரத்து துறை சார்பில் ஓலா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு ஓலா நிறுவனம் தரப்பில் அளித்த பதிலில் திருப்பி இல்லை என தெரிவித்துள்ள கர்நாடக போக்குவரத்து துறை, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஓலா நிறுவனத்திற்கு 6 மாதம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :