கள்ளச்சாராயம் - உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

Home

shadow

                        உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க உத்தரபிரதேச அரசு சார்பில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.


உத்தர பிரதேசம்உத்ராகண்ட் மாநில எல்லையில் அமைந்துள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழக்க, தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. இந்த குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கவுள்ளது.  முன்னதாக இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேச் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார். 100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பாரதிய ஜனதா அரசுகள் பொறுப்பேற்க வேண்டும என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :