காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு மாத வருமானமாக 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் - ராகுல் காந்தி

Home

shadow

                          காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானமாக 6 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச உத்தரவாத வருமானமாக அவர்கள் வங்கி கணக்குகளில் அரசின் சார்பில் மாதந்தோறும் பணம் செலுத்தப்படும் என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், எவ்வளவு தொகை செலுத்தப்படும் என அவர் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதம் 6 ஆயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும், இதன் மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் எனவும் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி இந்த வாக்குறுதி நிறைவேற்றக் கூடியதுதானா?என பல வகைகளில் ஆய்வு செய்த பின்னர், பல்வேறு பொருளாதார வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார். மேலும், உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும் எனவும் ராகுல் குறிப்பிட்டார்.

இது தொடர்பான செய்திகள் :