காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா

Home

shadow

                  காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டதாக ஹரியாணா முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

ரோத்தக் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்து விட்டதாகவும், தற்போது தனித்தன்மையுடன் அக்கட்சி செயல்படவில்லை என்றும் தெரிவித்தார். மத்திய அரசு நல்ல விஷயங்கள் செய்தால் அதனை தான் ஆதரித்து வருவதாகவும், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை தான் ஆதரிப்பதாகவும் கூறினார். மேலும், நமது பாரம்பரியத்துக்கும், கொள்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால், அதை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கும் முடிவில் ஹூடா இருப்பதாக தகவல்கள் வெலியான நிலையில், அவர் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :