காங்கிரஸ் கட்சி  தோற்றதற்கு கட்சியினரே காரணம் - காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Home

shadow

இமாசலப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதாவிடம் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்தத் தேர்தல் தோல்வி குறித்து மாநிலத் தலைநகரான சிம்லாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் தோல்வி குறித்து கூறப்பட்ட பல்வேறு காரணங்களை ராகுல் ஏற்கவில்லை. இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோற்றதற்கு முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கும் சில அமைச்சர்களும் அதிகார மோகத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதும், காங்கிரஸ் தலைவர்களிடையே காணப்பட்ட உட்கட்சிப் பூசலுமே காரணம் என்று ராகுல் காந்தி நேரடியாகக் குற்றம்சாட்டினார். மேலும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைத்து மக்களின் அன்பைப் பெற்றுள்ளதால், கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றிருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :