காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சியால் பல்துறை அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன - பிரதமர் மோடி விமர்சனம்

Home

shadow

காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சியால் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது வலைப்பூவில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு மக்கள் குடும்ப ஆட்சிக்கு பதிலாக நேர்மையான ஆட்சிக்கு வாக்களித்ததாகவும்காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் என்பது இல்லை எனவும், காங்கிரஸில் வேறு யாரேனும் தலைவர் பொறுப்பிற்கு வர நினைத்தால் அவர்கள் கட்சியே விட்டே வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். பாதுகாப்பு துறையை வருமானத்திற்கான ஆதாரமாகவே காங்கிரஸ் கட்சி கருதி வந்ததாகவும், பாதுகாப்பு படை வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய மரியாதையை அளித்ததில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு பின்னர், துப்பாக்கியில் தொடங்கி, போர் கப்பல்கள் வரை காங்கிரஸ் கட்சி ஊழல் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் குடும்ப ஆட்சியால் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், ஊடகங்கள் என பல்துறை அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :