கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை முடக்கம்

Home

shadow


        ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் ப சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியுள்ளது. டெல்லி ஜோர்பாக்கில் உள்ள வீடு, உதகமண்டலம், கொடைக்கானலில் உள்ள பங்களாக்கள், பிரிட்டனில் உள்ள வீடு, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் உள்ள டென்னிஸ் கிளப், சென்னை வங்கியில் உள்ள 90 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அமலாக்க துறையின் நடவடிக்கையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும், தலைப்பு செய்திக்காகவே இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாகவும் கார்தி சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :