காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் - தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்

Home

shadow

                         காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 6 மாநில அரசுகளுக்கு தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு பாதிப்பு உள்ள 102 நகரங்களில் 83 நகரங்கள் மாசைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை தேசிய பசுமை தீர்பாயத்தில்  சமர்ப்பித்துவிட்டது. மேலும் 19 நகரங்கள் செயல்திட்டங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையிலான அமர்வு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அஸ்ஸாம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், பஞ்சாப், உத்தரகண்ட், நாகாலாந்து ஆகிய 6 மாநில அரசுகளுக்கும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செயல்திட்டங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.நாடு முழுவதும் காற்று மாசு காரணமாக ஏற்படும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :