கால்நடைத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி எனத் தீர்ப்பு

Home

shadow

கால்நடை தீவனம் தொடர்பாக மாவட்ட கருவூலத்தில் இருந்து ரூ.84.5 கோடி பணம் எடுத்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலுவை குற்றவாளி என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில், கால்நடைத் தீவனம் வாங்குவதாகக் கூறி, ரூ.89.27 லட்சம் வரை மோசடி செய்ததாக, லாலு பிரசாத், ஜகன்னாத் மிஸ்ரா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களைத் தவிர, முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா, 3 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 34 பேருக்கு எதிராக கடந்த 1997-ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் சிபிஐ தரப்பு சாட்சியாக மாறிவிட்டார். 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தது. இதில் இருந்து பிகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேரை விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்களை வருகிற ஜனவரி 3-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி ஷிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :