காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவு

Home

shadow

     கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியுள்ள நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம், தமிழகத்திற்கு 177 புள்ளி இரண்டு ஐந்து டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. ஆனால், இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கடந்த சில நாட்களாக, கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கனமழை நீடிப்பதன் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட, அந்த மாநில முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், தமிழகத்திற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :