காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்

Home

shadow

              காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்

மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஏ.கே.சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்தது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் இடைக்கால தலைவராக,  மத்திய நீர்வள ஆணையாரான மசூத் உசேன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், மசூத் உசேனை நீக்கவிட்டு சுதந்திரமாக செயல்படக்கூடிய தலைவரை நியமிக்க வேண்டுமென, கடந்தாண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையே, அண்மையில் மசூத் உசேன் ஓய்வு பெற்றதையடுத்து, கடந்த வாரம் மத்திய நீர்வள ஆணையத் தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் செய்யப்பட்டார். ஆனால் மசூத் உசேன் வகித்த காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக யாரையும் மத்திய அரசு நியமனம் செய்யாமல் இருந்தது.

இந்த சூழலில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஏ.கே.சின்ஹாவே காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் செயல்படுவார் என பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு உத்தரவிட்டுள்ளது.

மத்திய நீர்வள ஆணையத்திற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் வேறு வேறு தலைவரை நியமனம் செய்ய வேண்டுமென தமிழக அரசு கோரியிருந்தது. ஆனால் தற்போது, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :