காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் அஞ்சலி

Home

shadow

காஷ்மீர் மாநிலம் அவலாஞ்சி பகுதியில் கடந்த 12ஆம் தேதி பனிச்சரிவு எற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூர்த்தி என்ற வீரர் உயிரிழந்தார். மூர்த்தியின் உடல் டெல்லியில் இருந்து கோவைக்கு நேற்று விமானத்தில் கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் மூர்த்தியின் உடலுக்கு ராணுவ வீரர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மூர்த்தியின் உடல் சாலை மார்கமாக அவரது சொந்த ஊரான நாதிப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மூர்த்தியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மூர்த்தியின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. உயிரிழந்த மூர்த்திக்கு தமிழரசி என்ற மனைவியும், சுபிக்சன், மெர்வின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னதாக உயிரிழந்த மூர்த்தியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்தது.

இது தொடர்பான செய்திகள் :