காஷ்மீர் நிதியமைச்சர் நீக்கம்

Home

shadow


காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அம்மாநில நிதி அமைச்சர் ஹசீப் திரபுவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநில நிதி அமைச்சராக இருந்த ஹசீப் திரபு, அண்மையில் டெல்லி சென்றார். அப்போது காஷ்மீர் விவகாரம் அரசியல் தொடர்பானது இல்லை என்றும், சமுதாயம் தொடர்பான பிரச்சனை எனவும் கருத்து தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் முயற்சியில் மக்கள் ஜனநாயக கட்சி ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்த கட்சியின் அமைச்சரே இவ்வாறு கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று அம்மாநில முதலமைச்சர் மெகபூபா முப்தி, ஹசீப் திரபுவை நிதி அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கினார். 

இது தொடர்பான செய்திகள் :