காஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்

Home

shadow

           காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயன்ற பாகிஸ்தான், படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. சர்வதேச அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்ல முயன்ற அந்நாட்டின் முயற்சி  தோல்வியடைந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முறையீடு செய்தது. இதன்படி அதிகாரப்பூர்வமற்ற முறையில் நேற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவிற்கான ஐ.நா. பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி பேசுகையில், காஷ்மீர் விவகாரம், இந்தியா பாகிஸ்தான் இடையேயான பிரச்னை எனவும், இதில் ஐ.நா. தலையிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.

இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் சீனாவும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளது.  இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான முயற்சியில் பாகிஸ்தான் பின்னடைவை சந்தித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :