காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி

Home

shadow

            ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா அர்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி செய்யது அக்பரூதின் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி செய்யது அக்பரூதின், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் மாற்றம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காகவும், நிலையான நிர்வாகத்திற்காகவுமே இந்த முடிவை இந்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா அர்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும், ஆனால் காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :