காஷ்மீருக்கு
சிறப்பு அந்தஸ் வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனுவை அரை மணி நேரம் படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லை
என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில்
370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிராகவும் காஷ்மீரில் முக்கிய அரசியல் கட்சி
தலைவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும்
உச்ச நீதிமன்றத்தில் 7வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று
விசாரணைக்கு வந்தது. மணுவை விசாரித்த நீதிபதிகள் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவு
ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குழப்பம் உள்ளதாகவும் 370 ஆவது பிரிவுக்கு எதிரான மனுவை அரை மணி நேரம்
படித்துப் பார்த்தும் புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்தனர். மேலும் 370 ஆவது
பிரிவு ரத்துக்கு எதிரான 6 மனுக்களிலும் குறைகள் உள்ளதாகவும் தாக்கல் செய்யப்பட்ட
7 மனுக்களில் 4 மனுக்களில் உள்ள பிழைகளை திருத்தி
மீண்டும் தாக்கல் செய்யுமாறும் உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.