காஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை

Home

shadow

                         காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், இன்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை நடைபெறுகிறது.


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்துள்ளது.  இந்த நடவடிக்கைக்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார். மேலும், காஷ்மீரில் நடந்த மாற்றங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட வேண்டும் என்று அதன் தலைவர் ஜோயன்னா ரானெக்காவுக்கு, குரேஷி கடிதம் எழுதினார். பாகிஸ்தானின் கோரிக்கையை அதன் நட்பு நாடான சீனா ஆதரித்துள்ளது.  இதையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலை கூட்டுமாறு சீனா கேட்டுக்கொண்டது.  இதனை அடுத்து  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடப்பதாக கவுன்சிலின் தலைவர் ஜோயன்னா ரானெக்கா தெரிவித்தார். மூடப்பட்ட அறைக்குள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

இது தொடர்பான செய்திகள் :