காஷ்மீர் - பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் தாக்குதல் 41 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Home

shadow

                        காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட  தாக்குதலில்  41 பயங்ரவாதிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம்  புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய  தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது. இது குறித்து தெரிவித்த இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் இந்த ஆண்டு மொத்தம் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் 41 பேர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இவர்களில் 25 பேர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத  இயக்கத்தினை சேர்ந்தவர்கள் எனவும்  இந்த 25 பேரில் 13 பேர் பாகிஸ்தானியர்கள் மீதமுள்ள  12 பேர் ஏ பிளஸ் பிரிவு தீவிரவாதிகள் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு தலைமை ஏற்க ஒருவரும் முன்வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர் புல்வாமா தாக்குதலுக்கு பின் அந்த இயக்கம் பாகிஸ்தானின் முயற்சியுடன் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :