குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி 2வது முறையாக இன்று பதவியேற்றார்

Home

shadow

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா 99 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 77 இடங்களையும் கைப்பற்றின. இதையடுத்து தற்போது முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், குஜராத்தில் புதிய அமைச்சரவை இன்று பொறுபேற்க உள்ளது. குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி 2வது முறையாக பதவியேற்க உள்ளார். துணை முதலமைச்சராக நிதின் படேலும், மேலும் சில அமைச்சர்களும் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களும், அக்கட்சியைச் சேர்ந்த பிற மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :