குஜராத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி

Home

shadow

 
                        குஜராத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதுலி துப்புரவு தொழிலாளர்கள் உட்பட 7  பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஓன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :