குஜராத்தை நோக்கி மீண்டும் திரும்பும் வாயு புயல்

Home

shadow

          குஜராத்தை நோக்கி மீண்டும் திரும்பும் வாயு புயல் 

          அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த வாயு புயல் வலுவிழந்து கடலுக்குள் சென்றது. இதனால் பெரும் பாதிப்பில் இருந்து குஜராத் தப்பியது. இந்நிலையில், மீண்டும் வாயு புயல் குஜராத் நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, பேரிடர் மீட்பு குழு  முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  திசை மாறிய வாயு புயல் கட்ச் கடலோர பகுதியை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு அதிதீவிர புயலாக மாறிய  வாயு, தற்போது, வலுவிழந்து காணப்படுகிறது. எனினும் இந்த புயலால் அதிக சேதம் உண்டாக கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :