குடும்ப அரசியலை முன்னெடுக்கும் காங்கிரஸ் கட்சி இருக்கும் இடம் இல்லாமல் போகும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விமர்சனம்

Home

shadow

குடும்ப அரசியலைத் தொடரும் காங்கிரஸ் கட்சியும் மற்ற பரம்பரைக் கட்சிகளைப் போலவே இருக்கும் இடம் தெரியாமல் போகும்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி,  சமீப காலமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் ஒரு பரம்பரைக் கட்சியாக இருப்பதற்கான விலையை காங்கிரஸ் இப்போது கொடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் பரம்பரைக் கட்சிகள் அனைத்தும்  ஒரு சில தலைமுறைகளைச் சேர்ந்த தலைவர்களின் பலத்தாலேயே நீடித்து வந்திருப்பதாக தெரிவித்த அவர்  அந்தத் தலைவர்களுக்கு மக்களைக் கவரும் தன்மை, அவர்களை புரிந்துகொள்ளும் திறன், அரசியல் திறமை போன்றவை இருக்கும் பட்சத்தில் கட்சி மிகப்பெரும் வெற்றியை பெறுகிறது என தெரிவித்தார். ஆனால், இதுபோன்ற பரம்பரைக் கட்சிகளுக்கென ஒரு குறைபாடு உள்ளதாகவும் அவை ஒரு காலகட்டத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போகும் என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :