கெஜ்ரிவாலை ஏன் தாக்கினேன்? - இளைஞர் விளக்கம்

Home

shadow          ஆம் ஆத்மி கட்சியின்  ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரச்சார வாகனத்தின் மீது ஏறிச்சென்று இளைஞர் ஒருவர் கன்னத்தில் திடீரென அறைந்தார். அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

தாக்குதலில் ஈடுபட்டவர் டெல்லியை சேர்ந்த சுரேஷ் என்று விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சுரேஷ் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நான் அதை செய்தேன் என்று தெரியவில்லை, காவலில் இருந்த போது இந்த செயலுக்காக வருந்தினேன், நான் எந்த கட்சியிலும் இல்லை, யாரும் என்னை கெஜ்ரிவாலை அடிக்குமாறு கூறவில்லை, காவல்துறையினர் என்னிடம் தவறாக நடக்கவில்லை என்றார்.

இது தொடர்பான செய்திகள் :