கேரள மழை வெள்ளத்தால் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த விமான சேவை மீண்டும் நாளை தொடங்க உள்ளது

Home

shadow

கேரள மழை வெள்ளத்தால் நிறுத்தி வைக்கப்பட்டடிருந்த கொச்சி- மதுரை- சிங்கப்பூர் விமான சேவைமீண்டும் நாளை தொடங்க உள்ளது. 


கேரள மாநிலத்தில் அண்மையில் பெய்த கன மழையால் கொச்சி விமான நிலையத்தில் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் கொச்சியிலிருந்து மதுரை வழியாக சிங்கப்பூர் செல்லும் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.  

இந்நிலையில், அங்கு நிலைமை சீரானதால் கொச்சி விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து 30 நாள்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொச்சி- மதுரை- சிங்கப்பூர் விமான சேவை, நாளை முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.  


இந்த விமான சேவை, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய 3 நாள்கள் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா விமான சேவை நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.  


முன்னதாக, கொச்சி வழியாகச் செல்லும் சென்னை-மதுரை விமான சேவை, நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது. காலை 7.45-க்கு சென்னையிலிருந்து கிளம்பிய விமானம் 8.45-க்கு மதுரையை வந்தடைந்தது

இது தொடர்பான செய்திகள் :