கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை - 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு

Home

shadow

                கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் கேரளா மகாராஷ்டிரா குஜராத் ,கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  கேரள மாநிலத்தில் கடந்த 8-ந் தேதி முதல் பெய்த பலத்த மழையால், 8 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பும், மண்சரிவும் ஏற்பட்டது.  மழை ஓய்ந்தநிலையில், மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.இன்னும் 27 பேரை காணவில்லை. மேலும் நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்களில் நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான செய்திகள் :