கேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு

Home

shadow

                       கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடக்கத்தில் சீராக மழை பெய்த நிலையில்,  தொடர்ந்து, இந்த மாதம் 8 ம் தேதியில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கேரளாவில் வயநாட்டில் உள்ள புத்துமலா, மலப்புரத்தில் உள்ள கவலப்பாரா ஆகிய இரண்டு கிராமங்களில் மிக அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் உயிருடன் புதைந்தனர்.  மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் உடல்கள் எங்கு புதைந்திருக்கின்றன? என்பதை கண்டறிவதில்  சிரமம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, மீட்புப்பணியில் தற்போது மண்ணுக்குள் ஊடுருவி உடல்களை அடையாளம் காணும் ரேடார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஐதராபாத்தை சேர்ந்த வல்லுநர்கள் ஜி.பி.ஆர் உதவியுடன் உடல்களை தேடும் பணியில் அங்கு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :