கேரளா மாநிலத்திற்கு மீன்பிடிக்க சென்ற போது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களை மீட்க கோரிக்கை மனு

Home

shadow

 

கேரளா மாநிலத்திற்கு மீன்பிடிக்க சென்ற போது கப்பல் மோதிய விபத்தில் மாயமான கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  9 மீனவர்களை மீட்கவும் கப்பல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் கோரி மீனவர்களின் உறவினர்கள் கன்னியாகுமர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

 

கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறையை சேர்ந்த ஒரு விசைபடகில் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கடந்த 7 ஆம் தேதி மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.  இதில் குமரி மாவட்டம் ராமன்துறையை சேர்ந்த 10  பேர், முள்ளூர் துறையை சேர்ந்த ஒருவர், கேரளாவை சேர்ந்த ஒருவர், கொல்கத்தாவை சேர்ந்த இருவர் உட்பட 14  மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். கேரளாவின் முனம்பம் ஆழ் கடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது, அந்த  வழியாக வந்த  மத்திய அரசுக்கு சொந்தமான  சரக்கு கப்பல் படகின் பின் பகுதியில் மோதி படகு கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இதில் குமரி மாவட்டம் ராமன் புதூரை சேர்ந்த யாக்கோபு, யுகநாதன், முள்ளூர் துறையை சேர்ந்த சகாயராஜ் உட்பட   3  மீனவர்கள்  உயிரிழந்தனர். விபத்து நடந்த சில மணி நேரத்தில் அந்த வழியாக வந்த சக மீனவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த இரண்டு மீனவர்களையும், உயிரிழந்த மூன்று மீனவர்களையும் மீட்டு  கொச்சி துறைமுகத்தில் உள்ள கடலோர காவல் படையினரிடம்  கொண்டு வந்து சேர்த்தனர்.  படகில் பயணம் செய்த மற்ற 9 மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமாகினர். இந்நிலையில் மாயமான 9 மீனவர்களை மீட்க கோரியும் விபத்து ஏற்படுத்திய கப்பல் மீது  வழக்கு பதிவு செய்யது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

 

இது தொடர்பான செய்திகள் :