கேரளா - கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

Home

shadow

                    கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. அதிக அளவாக, மலப்புரம் மாவட்டத்தில் மட்டும்  43 பேர் உயிரிழந்துள்ளனர். 36 பேரை காணவில்லை. ஆயிரத்துக்கு மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஆயிரத்து 116 வீடுகள், முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.  வெள்ளத்தால் 1 லட்சத்து 30‌ ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் மழை, வெள்ளத்துக்கு இதுவரையில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.  தீவாஸ், மாண்ட்சார், ராஜ்கார் மாவட்டங்களில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது.  வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :