கேரளாவில் கனமழை எச்சரிக்கை

Home

shadow        கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. பாலக்காடு, கண்ணூர் மாவட்டங்களில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், பாதிக்கப்பட்டவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர் மழையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார்குட்டி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி முதல் மதகு திறக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சபரிமலை செல்லும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் 21 மற்றும் 22ம் தேதிகளில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று இடுக்கி, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :