கேரளாவில் கனமழை – கண்ணூரில் வெள்ளப் பெருக்கு

Home

shadow

             கேரளாவில் கனமழை – கண்ணூரில்  வெள்ளப் பெருக்கு

            கேரளாவில் கனமழை காரணமாக, கன்னூர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இரண்டாவது நாளாக கோழிக்கோடு, இடுக்கி,மலப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்த நிலையில், கன்னூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மீட்புப் படையினர் படகுகள் மூலம் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை காரணமாக  பம்பலா அணை, மலக்கன்காரா அணைகளில் இருந்து நேற்று நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று கல்லார்குட்டி அணையும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் 22ஆம் தேதி வரை கேரளாவில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

இது தொடர்பான செய்திகள் :