கேரளாவில் தொடர் கனமழை – 8 பேர் பலி

Home

shadow

             கேரளாவில் தொடர் கனமழை – 8 பேர் பலி

            கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்காக மாநிலம் முழுவதும் 17 முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாம்களில் 260 குடும்பங்களை சேர்ந்த 1142 பேர் தஞ்சமடைந்து உள்ளனர். பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலம் முழுவதும் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கனமழை காரணமாக கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. கண்ணூரில் அதிகபட்சமாக 9.7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :