கோவா முதலமைச்சர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

Home

shadow


        மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பரீக்கரின் உடலுக்கு பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

 நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த மனோகர் பாரிக்கர் நேற்று இரவு காலமானார். நேர்மையானவர், எளிமையானவர் என பெயர் பெற்ற அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என பல தலைவர்கள் தங்களது இரங்கலில் தெரிவித்துள்ளனர்.

பாரிக்கர் மறைந்த இன்று தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பலர் கோவாவுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பாரிக்கரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இது தொடர்பான செய்திகள் :