கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Home

shadow

                        கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவா முதலமைச்சராக உள்ள மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். 


இதற்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார். 3 மாதங்களுக்கு பிறகு ஜுன் 14ம் தேதி அவர் இந்தியா திரும்பினார். 


தன் பின்னர், இருமுறை அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்ட மனோகர் பாரிக்கர் கடந்த வாரம் இந்தியா திரும்பினார்.


இந்நிலையில், தற்போது கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கோவா முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.  


இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மனோகர் பாரிக்கரை சந்தித்த துணை சபாநாயகரும், பாரதிய ஜனதா கட்சி எம் எல் ஏவுமான மைக்கேல் லோபோ, பாரிக்கர் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :