கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பு

Home

shadow

 

          கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு வெற்றி பெற்றுள்ளது.

 கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த 17-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை தொடர்ந்து கோவாவின் புதிய முதலமைச்சர் யார் எனும் கேள்வி எழுந்தது. 40 இடங்களை கொண்ட கோவா சட்டசபையில் 14 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் மிருதுளா சின்காவை சந்தித்து வலியுறுத்தினர். இதனிடையே பாரதிய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் கோவா சட்டசபை சபாநாயகராக இருந்து வந்த பிரமோத் சாவந்த்தை புதிய சபாநாயகராக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் இருந்ததால், நேற்று அதிகாலை 2 மணி அளவில் பிரமோத் கோவாவின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரமோத் சாவந்துக்கு கவர்னர் மிருதுளா சின்கா பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவருடன் சுதன் தாவ்லிகார், விஜய் சர்தேசாய், பாபு அஜ்காவோங்கர், ரோகன் காண்டே, கோவிந்த் கவுடே, வினோத பால்யகர், ஜெயேஷ் சால்காவோங்கர், மாவின் கோதின்ஹோ, விஷ்வஜித் ரானே, மிலிந்த் நாயக், நிலேஷ் கேப்ரால் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து பிரமோத் தலைமையிலான அரசு மீது கோவா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. சபாநாயகர் உட்பட 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 20 பேர் அரசுக்கு ஆதரவாகவும் 15 பேர் அரசுக்கு எதிராகவும் வாக்களித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரமோத் சாவந்த் தலைமையிலான அரசு வெற்றிப் பெற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :