சட்டப்பேரவை கூட்டத்தொடர் - ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் உரையாற்றுகிறார்.

Home

shadow

        தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 2018ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.அவைக்கு வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்தை பேரவைத் தலைவர் தனபால் வரவேற்றார். அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையாற்றுகிறார். இதில் முக்கிய அறிவிப்புகள் மற்றும் அரசின் சாதனைகள் குறித்த விவரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.                                       அதைதொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை, காணாமல் போன மீனவர்கள், தமிழக அரசின் மோசமான நிதி நிலை, விவசாயிகள் பிரச்சனை, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது. 

 

இது தொடர்பான செய்திகள் :